தாம்பரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் தவறாக வழி சொன்ன காவலாளியின் விரலை, நோயாளி ஒருவர் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பம்மலை சேர்ந்த அம்பிகாபதி காவலாளியாக பணிபுரிந்துவரும் நிலையில், மருத்துவமனைக்கு வந்த சின்னா என்பவர் ஊசி போடும் அறைக்கு வழி கேட்டுள்ளார். அம்பிகாபதி வழி தெரியாமல் தவறான வழி காட்டியதால் சின்னா ஆத்திரமடைந்ததாக தெரிகிறது.