தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியில் அதிகாரி எனக்கூறி வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த 30 சவரன் நகையை திருடி சென்ற நபரை போலீசார் கைது செய்தனர். வேலூரை சேர்ந்த வீரபத்திரன் என்பவர் மாநகராட்சி அதிகாரி எனக்கூறி வீட்டிற்குள் நுழைந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நிலையில், அவரை கைது செய்த போலீசார் 16 சவரன் நகையை மீட்டனர்.