திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வாக்கிங் சென்றவர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காசிகவுண்டன்புதூர் தாமரை கார்டன் பகுதியை சேர்ந்த ரமேஷ், அதிகாலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, மங்கலம் சாலை பைபாஸ் பகுதியில் காரில் வந்த மர்ம நபர்கள் சரிமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.