மதுரை பாண்டி கோவில் சுங்கச்சாவடி அருகே, முன்னால் சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் அதன் ஓட்டுநர் உட்பட பயணிகள் 7 பேர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து சிவகாசி சென்ற தனியார் பேருந்து பாண்டி கோவில் அருகே உள்ள சுங்கச்சாவடி முன்பு வந்தபோது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.