சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அரசுப் பேருந்தின் பின்புறம் தனியார் பேருந்து மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மதுரையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி அரசுப் பேருந்து சென்றபோது, பாப்பான்குளம் அருகே முன்னாள் சென்ற கார் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்ட்டுள்ளார். இதனால், அரசுப் பேருந்து ஓட்டுநரும் பிரேக் பிடிக்கவே, பின்னால் பரமக்குடி நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியது