சென்னை மதுரவாயலில் சாலையை ஆக்கிரமித்து தனியார் பள்ளி வைத்திருந்த தடுப்புகளை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை, மாணவர்களை வைத்து தடுத்து நிறுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவெங்கடேஸ்வரா நகரில் செயல்படும் பாரதி மெட்ரிகுலேஷன் பள்ளி நிர்வாகம் சாலையில் இரண்டு அடியை ஆக்கிரமித்து தடுப்பு அமைத்துள்ள நிலையில், தடுப்புகளின் முன்னால் மாணவர்கள் வரிசையாக நின்றதால் அதிகாரிகள் திரும்பி சென்றனர். மாணவர்களை முன்னிறுத்திய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதையும் படியுங்கள் : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தேர்தல் பரப்புரை