திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பஜார் பகுதியில் உள்ள கந்தசாமி தெருவில் இன்று வாலிபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் மார்க்கெட்டிற்கு சென்று கொண்டிருந்த பொழுது அந்தப் பகுதியில் சுற்றித்திரிந்த வெறிநாய் ஒன்று வாலிபரை கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. பின்னர் காயம் அடைந்த இளைஞரை பொதுமக்கள் மீட்டு மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது இதில் இளைஞரை வெறிநாய் கடிக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அந்த பகுதியில் வெறி நாய்கள் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் காய்கறி வாங்க மார்க்கெட்டுக்கு அவ்வழியாக செல்லும் பொதுமக்களை கடித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக திருத்தணி நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றச்சாட்டை வைத்துள்ளனர். Related Link சரக்கு வாகனமாக பயன்படுத்தப்பட்ட நடமாடும் மருத்துவமனை