கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலில் ஆண்டுக்கொரு முறை சிவலிங்கத்தின் மீது சூரியக் கதிர்கள் விழும் அரிய நிகழ்வு நடைபெற்றது. இதனை கண்டு பரவசமடைந்த பக்தர்கள் பின்னர் நடைபெற்ற சூரிய பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.இக்கோவிலில் ஆண்டு தோறும்சித்திரை மாதம் 11,12,13 ஆகிய மூன்று நாட்கள் சூரியன் தன் ஒளிக்கதிர்களால் இறைவனை அலங்கரிக்கும் நிகழ்வு நடைபெறும்.