ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே மீனவர்கள் வலையில் சிக்கிய அரிய வகை கடல் ஆமையை பத்திரமாக மீண்டும் கடலிலேயே விட்டனர். இரவு கடலுக்குச் சென்று வலையை விரித்து வைத்த நிலையில், வலையை எடுத்த போது சுமார் 80 கிலோ எடையுள்ள ஆமை சிக்கியது.