கரூர் மாவட்டம், குளித்தலை அருகே நியூஸ் தமிழ் செய்தியாளர் மீது குண்டர்கள் தாக்குதல் நடத்திய சம்பவத்தில், புதிய ஆடியோ ஒன்று வெளியாகி எம்.எல்.ஏ. பழனியாண்டியின் உண்மையான குரூர முகத்தை மக்களுக்கு தோலுரித்து காட்டியிருக்கிறது. வலி தாங்க முடியாமல் செய்தியாளர் கதறி துடித்தது முதல் முக்கிய ஆதாரத்தை அழிக்க சொல்லி எம்.எல்.ஏ.வின் மகன் மிரட்டியது வரை அனைத்தையும் கண் முன் கொண்டு வந்த அந்த ஆடியோவை அடிப்படையாக கொண்டாவது எம்.எல்.ஏ.வின் அடியாள் கும்பல்களுக்கு போலீசார் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. கிருஷ்ணராயபுரத்தில் ரவுடி ராஜ்ஜியம்கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் பகுதியில் இயங்கி வரும் குவாரியில் விதிமீறல் நடப்பது குறித்து, செய்தி சேகரிக்க சென்ற நியூஸ் தமிழ் செய்திக் குழுவை அடியாட்களுடன் சேர்ந்து எம்.எல்.ஏ. பழனியாண்டி கடத்தி சென்று, மிருகத்தனமாக தாக்கிய சம்பவம் ஊடகத்துறையை தாண்டி, அனைவரிடத்திலும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியிருந்தது. செய்தியாளரை பட்டப்பகலில் கடத்தி செல்லும் அளவுக்கு எம்.எல்.ஏ.வுக்கு நெஞ்சழுத்தம் கூடிப்போய் விட்டது என்றால் தங்களின் நிலை என்னாவது? என மக்களின் மனம் பதறியது. இந்நிலையில் அன்று நடந்த அதிர்ச்சி சம்பவத்தை விளக்கி கூறும் புதிய ஆடியோ ஒன்று வெளியாகி கிருஷ்ணராயபுரத்தில் எம்.எல்.ஏ. பழனியாண்டி நடத்தி வரும் ரவுடி ராஜ்ஜியத்தை தோலுரித்து காட்டியிருக்கிறது. பூதம் போல வந்த குண்டர்கள்குவாரியில் நடக்கும் விதிமீறல்களை செய்திக் குழு வீடியோ எடுத்த போது, திடீரென பூதம் போல வந்த எம்.எல்.ஏ. பழனியாண்டி தலைமையில் செயல்படும் குண்டர்கள் கூட்டம், செய்தியாளர் கதிரவன், ஒளிப்பதிவாளர் செபாஸ்டினை கண்மூடித்தனமாக அடிக்க தொடங்கியது. தாம் திருச்சி செய்தியாளர், என்னை தெரியாதா? என கதிரவன் எடுத்துக் கூறியும் எதையும் காது கொடுத்து கேட்காத குண்டர்கள், சகட்டுமேனிக்கு அவர்களை அடித்து உதைத்தனர்.குலை நடுங்குகிறதுசெய்திக் குழுவிடம் இருந்து கேமரா, மைக்கை பறித்துக் கொண்டு, கேமரா ஸ்டாண்டை வைத்தே காட்டுமிராண்டித்தனமாக அந்த கும்பல் தாக்கியிருக்கிறது. வலி தாங்க முடியாமல் செய்தியாளர் அய்யோ, அம்மா... என கதறியும் இரக்கம் காட்டாத மிருகக் கூட்டம் இடைவிடாமல் அடித்த ஆடியோவை கேட்கும் போதே குலை நடுங்குகிறது.ஆதாரங்களையும் அழிக்கும் வேலைஅடிதடி கும்பலிடம் இருந்து செய்திக் குழுவை போலீசார் மீட்க நீண்ட நேரமான நிலையில், அது வரையிலும் விடாமல் அணு அணுவாக சித்ரவதை செய்திருக்கிறது மனித ரூபத்தில் இருந்த அந்த மிருகக் கூட்டம். இறுதியாக கதிரவன் மற்றும் செபாஸ்டினை போலீசார் மீட்ட நிலையில், அடித்தது தெரிந்து விடக் கூடாது என்பதற்காக காவல் நிலையம் செல்லும் சிறிது நேரத்திற்குள் அனைத்து ஆதாரங்களையும் அழிக்கும் வேலையில் இறங்கியது அந்த கும்பல்.மகன் விமல் பேசிய ஆடியோகுறிப்பாக, செய்திக் குழு வீடியோ எடுத்தது முதல் எம்.எல்.ஏ., பழனியாண்டி வந்து அடித்து கடத்தி சென்றதை வரை அனைத்தும் அருகில் இருந்த பெட்ரோல் பங்க் சிசிடிவி கேமராவில் பதிவானதாக சொல்லப்படுகிறது. அதனை போலீசோ அல்லது நியூஸ் தமிழ் செய்தி குழுவோ கைப்பற்றினால், தங்களது வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும் என்பதை அறிந்த கும்பல், உடனே பங்க் உரிமையாளரை தொடர்பு கொண்டு சிசிடிவி காட்சிகளை அழித்து விடும்படி மிரட்டியிருக்கிறது. கடந்த ஒரு மணி நேரமாக பதிவான அனைத்தையும் அழித்து விட்டு, வேலை செய்யவில்லை என கூறும் படி உரிமையாளரிடம் எம்.எல்.ஏ. பழனியாண்டியின் மகன் விமல் பேசிய ஆடியோவும் வெளியாகியுள்ளது. கொட்டத்தை அடக்க வேண்டும்செய்திக் குழு என்ற பயம் கொஞ்சம் கூட இல்லாமல் அடித்து உதைத்ததுடன், சினிமாவில் வருவது போல செய்த தவறை தடயமே இல்லாமல் உடனே அழிக்க நினைக்கும் இந்த ரவுடி கும்பல், இதற்கு முன் எத்தனை பயங்கர சம்பவங்களை கச்சிதமாக செய்து முடித்திருக்கும் என நினைக்கும் போதே கிலியை ஏற்படுத்துகிறது. அதோடு, இது நாள் வரை பழனியாண்டி மீது வழக்குப்பதிவு செய்யாமல் தாமதப்படுத்தும் காவல்துறை, எம்.எல்.ஏ.வின் பெயரை எதிலும் சேர்க்காமல் விளக்கம் மட்டுமே கொடுத்து வருவதை பார்க்கும் போது அவர்களையும் இந்த குண்டர்கள் கூட்டம் எந்தளவுக்கு அடக்கி வைத்திருக்கிறது என்பதை மக்களால் புரிந்து கொள்ள முடிகிறது. எனவே உடனடியாக பெட்ரோல் பங்க்கில் அழித்ததாக கூறப்படும் வீடியோவை தொழில்நுட்ப வல்லுநர்கள் உதவியுடன் மீட்டு, அதனை தகுந்த சாட்சியாக பயன்படுத்தி எம்.எல்.ஏ. பழனியாண்டியின் கொட்டத்தை அடக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. Related Link MLA பழனியாண்டியின் கொடூர முகம்