தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியபட்டணத்தில் சுமார் 150 பைபர் படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு அமைக்கப்பட்ட தூண்டில் வளைவு பலத்தால், மணல் திட்டு உருவானது. இதனால் மீனவர்கள் 20 நாட்களாக கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மீனவ பெண்கள் கம்பில் கருப்புக் கொடி கட்டி கையில் ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த மீன்வளத்துறை உதவி இயக்குனர் புஸ்ராவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் வந்து பார்வையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை என மீனவர் பெண்கள் குற்றம் சாட்டினர். மேலும் 20 நாட்களாக மீன்பிடிக்க செல்லாததால் மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : அறுவடைக்குத் தயாரான பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்