திண்டுக்கல் அருகே, டாஸ்மாக் கடையின் முன் கிடந்த இளைஞரின் சடலம். சடலத்தை மீட்டு விசாரணையில் இறங்கிய போலீஸ். சிசிடிவி காட்சி மூலம் சிக்கிய கொலையாளிகள். பழிக்கு பழியாக இளைஞர் கொலை செய்யப்பட்டது விசாரணையில் அம்பலம். இளைஞரை கொலை செய்து விட்டு தப்பி ஓடிய கும்பல் யார்? அவர்கள் கைது செய்யப்பட்டார்களா? நடந்தது என்ன?கோதைமங்கலம் டாஸ்மாக் கடைக்கு சில இளைஞர்கள் மது குடிக்க போய்ருக்காங்க. அப்ப கடை வாசல்ல சின்னதம்பி-ங்குற இளைஞர் தலை சிதைஞ்ச நிலையிலும், உடல் ஃபுல்லா கத்தி குத்து காயங்களுடனும் உயிரிழந்து கிடந்துருக்காரு. இதபாத்து அதிர்ச்சியடைஞ்ச அந்த இளைஞர்கள் சின்னதம்பி உயிரிழந்த பத்தி அவரோட உறவுக்காரங்களுக்கு ஃபோன் பண்ணி சொல்லிருக்காங்க. உடனே சம்பவ இடத்துக்கு போன இளைஞர்கள், சின்னத்தம்பி கிடந்த கோரத்த பாத்து கதறி அழுதுருக்காங்க.இந்த விஷயத்த கேள்விப்பட்டு, ஸ்பாட்டுக்கு வந்த போலீஸ் சடலத்த மீட்டு போஸ்ட் மார்டத்துக்கு அனுப்பி வச்சாங்க. அடுத்து சின்னத்தம்பிய கொன்னது யாரு? அவருக்கு யார் கூட யாராவது முன்பகை இருக்கான்னு தெரிஞ்சுக்கிற அவரோட உறவினர்கள் கிட்ட விசாரிச்சுருக்காங்க போலீஸ்.அப்ப ஒரு வருஷத்துக்கு முன்னாடி நெப்போலியன்-ங்குற இளைஞர் கொலை கேஸ்ல சின்னத்தம்பி தான் ஏ1ன்னு போலீஸ்க்கு தெரிய வந்துருக்கு. அதவச்சு சின்னத்தம்பி பழிக்கு பழியா கொலை செய்யபப் பட்டிருக்கலாம்னு நினைச்ச போலீஸ், அங்குள்ள சிசிடிவி காட்சிகள எடுத்து ஆய்வு பண்ணாங்க.அப்ப அதே பகுதிய சேந்த சூர்யா, விஜய், சிவான்னு அஞ்சு இளைஞர்கள் சின்னத்தம்பிய கொன்னுட்டு தப்பிச்சு போன காட்சி பதிவாகியிருந்துச்சு. அதவச்சு சம்பந்தப்பட்ட கொலையாளிகளோட வீட்டுக்கு போய்ட்டு போலீஸ் விசாரிச்சுருக்காங்க.அப்ப யாருமே வீட்ல இல்ல. அதுக்கடுத்து நெப்போலியனோட தம்பி சிவாவோட செல்போன் நம்பர ட்ரேஸ் பண்ணிருக்காங்க. அப்ப சிக்னல் அதே ஏரியாவுல காட்டிருக்கு.இதனால சிக்னல் காட்டுன இடத்துக்கு போன போலீஸ் சிவா, விஜய், சூர்யா உள்ளிட்ட 5 பேர பிடிச்சு அவங்கள, தங்களோட கஸ்டடியில எடுத்து விசாரிக்க ஆரம்பிச்சாங்க.திண்டுக்கல்ல உள்ள பழனி, தெரசாம்மாள் காலனிய சேந்த நெப்போலியனுக்கு கல்யாணமாகி குழந்தைங்க இருக்காங்க. இவரும் அதே பகுதிய சேந்த சின்னத்தம்பி, சூர்யா, விஜய் ,சிவசங்கர்,வளவன்னு எல்லாரும் சின்ன வயசுல இருந்தே க்ளோஸ் ப்ரண்ட்ஸ். இதுல சின்னத்தம்பி மேல அடிதடி, கஞ்சா போன்ற வழக்கு இருக்குன்னு கூறப்படுது.ஒரு வருஷத்துக்கு முன்னாடி அங்குள்ள ஒரு வீட்ல நிகழ்ச்சி நடந்துருக்கு. அப்ப நெப்போலியனோட அம்மா தான் எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறிட்டு இருந்துருக்காங்க. அந்த நேரத்துல மதுபோதையில அங்க வந்த சின்னத்தம்பிய, நெப்போலியனோட அம்மா தள்ளி உட்காற சொல்லிருக்காங்க. அதுக்கு சின்னத்தம்பி, அவங்கள தகாத வார்த்தையால திட்டிருக்காரு. இதகேட்டு கோபமான நெப்போலியனோட அம்மா, சின்னத்தம்பிய பதிலுக்கு திட்டிட்டு, வீட்டுக்கு போன உடனே நடந்த எல்லாத்தையும் தன்னோட மகன் கிட்ட சொல்லிருக்காங்க.இதனால, கொலைவெறியில அந்த நிகழ்ச்சி நடந்த வீட்டுக்கு போன நெப்போலியன், சின்னத்தம்பிய சரமாரியா தாக்கிருக்காரு. பதிலுக்கு சின்னத்தம்பியும் தாக்க, அந்த இடமே கலவரம் போல இருந்துருக்கு.அப்ப கீழ கிடந்த குத்தூசிய எடுத்த சின்னத்தம்பி, நெப்போலியன சரமாரியா குத்திருக்காரு. இதுல நிலைகுலைஞ்ச நெப்போலியன் சம்பவ இடத்துலையே உயிரிழந்துட்டாரு.இந்த கேஸ்ல சின்னத்தம்பிய அரெஸ்ட் பண்ண போலீஸ், குண்டாச போட்டு அவர சிறையில அடைச்சுட்டாங்க. அண்ணன் உயிரிழந்த சோகத்துல இருந்த தம்பி சிவா, அண்ணன கொலை செஞ்ச சின்னத்தம்பிய பழிக்குபழியா கொன்னே ஆகனும்ன்னு தீர்க்கமா இருந்துருக்காரு. அதுக்காக அண்ணனோட நண்பர்கள் 5 பேரையும் உடன் சேத்துக்கிட்டாரு. சமீபத்துல, சின்னத்தம்பி பெயில்ல வெளிய வந்துருக்காரு. இத தெரிஞ்சுக்கிட்ட சிவாவும், சூர்யாவும் மதுரையில இருந்து சொந்த ஊருக்கு திருப்பிருக்காங்க. அடுத்து சின்னத்தம்பி எங்க எங்க போறார், எந்த நேரத்துல தனியா இருக்கார்னு அவர கண்காணிச்சுட்டே இருந்துருக்காங்க அந்த கும்பல். சம்பவத்தன்னைக்கு சின்னத்தம்பி மட்டும் தனியா அங்குள்ள மதுக்கடைக்கு போய்ட்டு வாசல்ல உட்காந்து மதுகுடிச்சுட்டு இருந்துருக்காரு. அப்ப அங்க வந்த சூர்யா, விஜய், சிவா, சிவசங்கர், வளவன்னு 5 பேரும் சின்னத்தம்பி கிட்ட வாக்குவாதம் பண்ணிருக்காங்க. அப்ப சிவா எதுக்கு எங்க அண்ணன கொலை செஞ்ச, எங்க அண்ணன கொன்னுட்டு நீ மட்டும் நிம்மதியா வாழுறியான்னு கேட்டு, கத்திய எடுத்து சின்னத்தம்பிய சரமாரியா குத்திருக்கான். கூட இருந்த 5 பேரும் சின்னத்தம்பிய சரமாரியா கத்தியால குத்திருக்காங்க. சிவா கீழ கிடந்த கல்ல எடுத்து சின்னத்தம்பியோட தலையிலையே போட்டுட்டான். இதுல தலை சிதைஞ்சு போய் சம்பவ இடத்துலையே சின்னத்தம்பி உயிரிழந்துட்டாரு.விசாரணையோட முடிவுல எல்லாம் உண்மையும் தெரிஞ்சுக்கிட்ட போலீஸ் சூர்யா, விஜய், சிவா, சிவசங்கர், வளவன்னு 5 பேர அரெஸ்ட் பண்ணி விசாரிச்சுட்டு இருந்தாங்க.இதையும் பாருங்கள் - அண்ணன் கொ*லக்கு பழிக்குப் பழி, SPY வேலை பார்த்த டீ மாஸ்டர் | CrimeNews | CrimeUpdate