ஐப்பசி மாத தேய்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் உள்ள நந்தியம் பெருமானுக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். மஞ்சள் தூள், தேன், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், கரும்புசாறு, எலுமிச்சை சாறு உள்ளிட்டவை கொண்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.