உலகப் புகழ் பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்ச்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிறப்பு திருப்பலி பங்கு தந்தை ஸ்டார்வின் தலைமையில் நடைபெற்றது. இந்த திருப்பலியில் உலக நன்மைக்காக சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. பின்னர் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை சொல்லி மகிழ்ச்சி அடைந்தனர்.