நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு பள்ளி வளாகத்திற்குள் மாணவன் உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். சுவாமி சிவானந்தா சாலையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் 26ஆம் தேதி சக மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 9ஆம் வகுப்பு மாணவர் கவின்ராஜ் உயிரிழந்தார்.