தடுமாறி கீழே விழுந்த மாணவன் : சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள பள்ளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் லட்சுமி மூர்த்தி இவர்கள் சேலம் மார்க்கெட் பகுதியில் மக்காசோளம் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர் விடுமுறை நாட்களில் அவருடைய மகன் சந்தோஷ் இவர்களுக்கு உதவியாக இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்றைய தினம் பள்ளி விடுமுறை என்பதால் அவர்களுக்கு உதவியாக இருக்க வந்த சந்தோஷ் குடிநீர் வாங்குவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்பொழுது சேலம் நகர பேருந்து நிலையத்திலிருந்து அடிவாரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து சந்தோஷம் தலைமீது ஏறியதில் சம்பவ இடத்திலேயே சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார் சேலம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர்களுக்கு விடுமுறை நாட்கள் உதவியாக இருந்து வந்த பதினொன்றாம் வகுப்பு மாணவன் தலை மீது பேருந்து ஏறியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. Related Link 18 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்ட சுனாமி வீடுகள்