Also Watch
Read this
Posted on: Mar 04, 2026 08:05 AM
By: Fyrose Banu

வருவாய்த்துறை சங்கங்களின் (FERA) கூட்டமைப்பு சார்பாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை சங்கங்களின் (FERA) கூட்டமைப்பு சார்பாக வருவாய்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தனி பாதுகாப்பு சட்டம் இயற்றிட வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் அதுமட்டுமில்லாமல் சங்கத்தின் சார்பில் கடந்த 8 தினங்களாக 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
சாலை மறியல் போராட்டம்
இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையத்தில் வருவாய்த்துறை சங்கங்களின் மாவட்ட தலைவர் விஜயசேகர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சிவகுமார் ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 அம்சம் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம்
அப்போது மறியல் போராட்டத்தின் போது, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சிறப்பு பணி பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக இயற்றப்பட வேண்டும், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலம் வரை ஊதியம் உடன் வழங்கிட வேண்டும், பணியில் மரணமடையும் கிராம உதவியாளர்களின் வாரிசுகளுக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் உரிய பணியிடம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் தமிழக அரசுக்கு எதிராக பல்வேறு கண்டன கோஷமிட்டு ஊர்வலமாக சென்று சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்..
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved