மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான விசைப்படகு முற்றிலுமாக எரிந்து சேதமானது. பழையார் மீனவ கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தனுக்கு சொந்தமான விசைப்படகை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்திவிட்டு, பாதுகாப்புக்காக காட்டூரை சேர்ந்த கலியபெருமாள் என்பவரை வைத்து விட்டு சென்ற நிலையில், திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது.