கன்னியாகுமரி மாவட்டம், ஆனக்குழி பகுதியில் சாலையை கடக்க முயன்ற ஸ்கூட்டி மீது, அவ்வழியே வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி, தூக்கி வீசப்பட்ட சிசிடிவி காட்சி வெளியாகியது. பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த பிரவீன் என்பவர், தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் குளச்சல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே ஸ்கூட்டரில் வந்த இரண்டு பெண்கள் சாலையை கடக்க வலது புறமாக ஸ்கூட்டரை திருப்பிய போது, இருசக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்டனர். விபத்தில் இருவர் லேசான காயமடைந்த நிலையில், இருசக்கர வாகனத்திற்கு அடியில் சிக்கிய பெண் மற்றும் இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.