மதுரை தெப்பக்குளம் பேருந்து நிலையத்தில் பள்ளி மாணவர்கள் மோதிக்கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. அரசு உதவி பெறும் பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இரு பிரிவாக பிரிந்து மோதிக்கொண்டதில் ஒரு மாணவரை சரமாரியாக தாக்கியதில் அவரது மூக்கில் இருந்து ரத்தம் சொட்டிய நிலையில், பள்ளி பையை எடுத்துச் சென்ற காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.