திருவண்ணாமலை... கணவருடன் கோபித்துக்கொண்டு பல மாதங்களாக தாய் வீட்டிலேயே இருந்த மனைவி. சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வரச்சென்ற கணவன். கணவர் எவ்வளவோ கெஞ்சி கூத்தாடியும் வர மறுத்த மனைவி. கணவனின் டார்ச்சரை தாங்க முடியாமல் மனைவி செய்த பயங்கரம். கணவனுடன் மனைவி வாழ மறுத்தது ஏன்? நடந்தது என்ன?திருவண்ணாமலை மங்கலம் பக்கத்துல உள்ள ஜம்போடை-ங்குற கிராமத்த சேந்தவர் பச்சையப்பன். இவரோட மனைவி துர்கா. இந்த தம்பதிக்கு ரெண்டு பிள்ளைகள் இருக்காங்க. இந்த தம்பதிக்கு 9 வயசுல ஒரு மகனும், 7 வயசுல ஒரு இன்னொரு மகனும் இருக்காங்க. லாரி டிரைவரான பச்சையப்பன்னுக்கு குடிப்பழக்கம் இருந்துருக்கு. மங்கலத்துல உள்ள ஒரு பிரைவேட் கம்பெனியில வேலை பாத்துட்டு இருந்துருக்காங்க. பச்சையப்பன் ஒழுங்கா வேலைக்கு போகாம, குடியும் கும்மாளமுமாவே இருந்ததா சொல்லப்படுது. அதுமட்டுமில்ல, பிள்ளைங்களோட கல்விக்காகவும், வீட்டுச் செலவுக்காகவும் மனைவி கஷ்டப்பட்டு சம்பாதிச்சு வச்சிருந்த காச எடுத்துட்டு போய் குடிச்சிட்டு வந்துருவாராம்.மனைவி காசுல மூக்கு முட்ட குடிச்சிட்டு, அதே மனைவிய தகாத வார்த்தைகளால பேசி அடிச்சு, ரகளை பண்ணிருக்கார் கணவன் பச்சையப்பன். இதுக்கு இடையில, மனைவி துர்காவோட நடத்தை மேல பச்சையப்பனுக்கு சந்தேகம் வந்திருக்கு. குடிபோதையினால வீட்டுல ஏற்பட்ட பிரச்சினை போய், கடந்த சில நாட்களா மனைவியோட நடத்தை மேல சந்தேகப்பட்டு பச்சையப்பன் சண்ட போட்டுருக்காரு. இதனால, பிள்ளைங்கள கூப்டிட்டு கணவன் வீட்டுல இருந்து வெளியேறுன துர்கா, தன்னோட அம்மா வீட்டுக்கு போய்ருக்காங்க.கடந்த ரெண்டு மாசமா தாய் வீட்டுல இருந்த துர்காவுக்கு, பச்சையப்பன் ஃபோன் பண்ணி பாத்திருக்காரு. ஆனா, துர்கா அந்த ஃபோன அட்டண்ட் பண்ணாம இருந்துருக்காங்க. இதனால கடுப்பாகி மாமியார் வீட்டுக்கு போய், துர்காகிட்ட தகராறு பண்ணுன பச்சையப்பன், தன்கூட வீட்டுக்கு வரச்சொல்லி கேட்டுருக்காரு. ஆனா, இனிமே உன் கூட என்னால வாழ முடியாதுன்னு துர்கா திட்டவட்டமா சொல்லிருக்காங்க.சம்பவத்தன்னைக்கு, துர்கா, தன்னோட அம்மாகூட பக்கத்துல உள்ள கடைக்கு போய்ருக்காங்க. இத தெரிஞ்சிக்கிட்டு அங்க போன பச்சையப்பன், என் கூட வந்து வாழ மாட்டேன்னு சொன்ன நீ, இந்த உலகத்துலேயே வாழக்கூடாதுன்னு சொல்லி, மனைவி துர்காவ அடிக்க பாஞ்சிருக்காரு. அப்போ, கோபத்தோட உச்சிக்கு போன துர்கா, கணவன் பச்சையப்பன் கழுத்துல போட்டுருந்த துண்டால அவரோட கழுத்த வெறிகொண்டு நெரிச்சிருக்காங்க. பச்சையப்பன் ஐயப்பன் சுவாமிக்கு மாலை போட்டுருந்த துண்டாலேயே அவரோட கழுத்த நெரிச்சதுல சுருண்டு விழுந்துருக்காரு. உடனே அங்க இருந்தவங்க மூச்சு பேச்சு இல்லாம கிடந்த பச்சையப்பன் ஹாஸ்பிட்டலுக்கு கூப்பிட்டு போனாங்க. ஆனா, ஹாஸ்பிட்டல அவர பரிசோதனை பண்ண மருத்துவர்கள் பச்சையப்பன் ஏற்கனவே உயிரிழந்துட்டதா சொல்லிட்டாங்க.மருத்துவர்கள், கணவன் உயிரிழந்துட்டதா சொன்னதும் பதறிப்போன மனைவி துர்கா, நேரா ஸ்டேஷனுக்கு போய் சரணடைஞ்சு நடந்த உண்மைகள் எல்லாத்தையும் சொல்லிருக்காங்க. அதுக்குப்பிறகு, கணவன கொலை செஞ்ச மனைவி துர்கா மேல கொலை வழக்குப்பதிவு செஞ்ச காவல்துறையினர் அவங்கள அரெஸ்ட் பண்ணி தொடர்ந்து விசாரணை பண்ணிட்டு இருக்காங்க. அப்பா உயிரிழந்துட்டாரு, அம்மாவும் கொலை கேஸ்ல ஜெயிலுக்கு போயிட்டாங்க. இப்ப அப்பாவியான ரெண்டு மகன்கள்தான் பெற்றோர் ஆதரவு இல்லாம பரிதவிக்குற நிலைக்கு ஆளாகிருக்காங்க. சந்தேகத்தால கணவன் - மனைவிக்குள்ள ஏற்பட்ற சண்ட ஒரு குடும்பத்தையே சிதைச்சு சின்னாபின்னமாக்கும் அப்டிங்குறதுக்கு இந்த சம்பவமும் ஒரு உதாரணம்.