விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே தனியார் சோலார் உயர் கோபுரத்தில் ஏறி தற்கொலைக்கு முயன்ற பெண்ணை தீயணைப்புத் துறையினர் கயிறு கட்டி மீட்டனர். D.கடமங்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் சோலார் நிறுவனத்திலிருந்து ஆவியூர் துணை மின் நிலையத்திற்கு குடியிருப்பு வழியாக மின்சாரம் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என ஏற்கனவே மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இந்நிலையில், மாதர் சம்மேளன தலைவர் பஞ்சவர்ணம் சோலார் நிறுவனத்தின் கோபுரம் மீது ஏறி தற்கொலைக்கு முயன்றார்.