திருப்பூர் மாவட்டம் உடுமலையில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தி விட்டு, இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த தீபக் என்ற இளைஞர், உடுமலையை சேர்ந்த இளம் பெண்ணிடம் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, பெண்ணின் வீட்டிற்கு சென்று தனது காதலை தெரிவித்தார்.