திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் பைக்கில் வீலிங் செய்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்ட நபரை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். வடமதுரை பேட்டையை சேர்ந்த நாகேந்திரன், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தாமரைப்பாக்கம் அணைக்கட்டு பகுதியில் பைக்கில் வீலிங் செய்து, அதை வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீஸார் நாகேந்திரனை பிடித்து விசாரித்து வரும் நிலையில், அவரது நண்பர் சத்யாவை தேடி வருகின்றனர்.இதையும் படியுங்கள் : இன்னோவா காரில் கஞ்சா கடத்தல்