முந்திரி காட்டுக்குள் அரை நிர்வாண கோலத்தில் உயிரிழந்து கிடந்த இளம்பெண். கோவிலில் அன்னதானம் சாப்பிட்ட பக்தர்களிடம் விசாரணை. சொந்த ஊர்க்காரனே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி கொலை செய்த கொடூரம். கடந்த 4 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடந்து வந்த வழக்கில் தற்போது தீர்ப்பு. இளம்பெண்ணை சீரழித்த கொடூரனுக்கு நீதிமன்றம் விதித்த தீர்ப்பின் விவரம் என்ன?ஆடைகள் கிழிந்து அரைநிர்வாணமாக இளம்பெண் சடலம்2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாசம் 16ந் தேதி முந்திரிக்காட்டுக்குள்ள ஒரு இளம்பெண் ஆடையெல்லாம் கிழிஞ்சி அரை நிர்வாண கோலத்துல உயிரிழந்து கிடந்துருக்காங்க. அத பாத்து அதிர்ச்சியான சிலர் போலீசுக்கு தகவல் குடுத்துருக்காங்க. அடுத்து, அங்க வந்த போலீசார் அந்த இளம்பெண்ணோட சடலத்த மீட்டதோட முந்திரிக்காடு பக்கம் ஆடு, மாடு மேச்சிட்டு இருந்த மக்கள்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, இருப்பு அய்யனார் கோவில்ல அன்னதானம் நடக்குறதாகவும், அதுக்காக நிறைய மக்கள் குறுக்குவழியில முந்திரிக்காட்டு வழியா போனதாகவும் சொல்லிருக்காங்க. அடுத்து, அந்த கோவிலுக்குப்போன போலீசார் அன்னதானம் சாப்பிட்டுட்டு இருந்த பக்தர்கள்கிட்ட விசாரிச்சிருக்காங்க. அப்போ, யாருக்குமே எந்த தகவலுமே தெரியல. ஆனா, அந்த இளம்பெண் கோவிலுக்குதான் வந்ததாகவும், அந்த பொண்ணு வந்த சாலைகளையும் சிலர் காட்டிருக்காங்க. அடுத்து, அந்த சாலைகள்ல இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை செக் பண்ணிருக்காங்க. அந்த, பதிவுல இருந்த எல்லார்கிட்டயும் கிடுக்குப்பிடி விசாரணை நடத்திருக்காங்க போலீசார். அப்போ, அத்தனைபேரும் போலீசார் கண்ணுல சிக்குனதோட, கேட்ட கேள்விகளுக்கும் தெளிவா பதில் சொல்லிருக்காங்க. ஆனா, அதுல ஒரே ஒரு இளைஞர் மட்டும் மிஸ்ஸிங். அதனால, அந்த இளைஞரை தேடுற வேலையில இறங்கிருக்காங்க. இதுக்குமத்தியில காட்டுப்பகுதியில அந்த இளைஞர் சுத்திட்டு இருக்குறதா போலீசுக்கு ஒரு தகவல் கிடைச்சிருக்கு. அங்கபோய் அந்த இளைஞரை சுத்தி வளைச்சி விசாரிச்சப்ப தான் பல அதிர்ச்சி தகவல்கள் எல்லாமே வெளியவந்துச்சு. அன்னதானத்திற்கு சென்று கொண்டிருந்த இளம்பெண்புதுக்கோட்டை, திருமயம் பக்கத்துல உள்ள சுதந்திரபுரம் கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ரெண்டு மகள்கள், ஒரு மகன் இருக்காங்க. கணவன் உடல்நிலை சரியில்லாம உயிரிழந்ததால மனைவி ஒரு தனியார் ஆலையில வேலை பாத்து பிள்ளைகளை வளத்துருக்காங்க. அதுல, மூத்த மகளை கல்யாணம் பண்ணி குடுத்த தாய், 28 வயசான இளைய மகளுக்கு வரன் பாத்துட்டு இருந்துருக்காங்க. இதுக்குமத்தியிலதான், சாக்கோட்டை பக்கத்துல உள்ள புளியங்குடி கிராமத்துல உள்ள இருப்பு அய்யனார் கோவில்ல அன்னதானம் நடந்துருக்குது. அந்த அன்னதானத்துல கலந்துக்குறதுக்காக சுற்றுவட்டார கிராமத்துல இருந்து மக்கள் எல்லாரும் போய்ருக்காங்க. அப்படிதான், கணவனை இழந்த பொண்ணோட இளைய மகளும் கோவிலுக்கு போய்ருக்காங்க.”குறுக்குவழியில் சென்றால் கோவிலுக்கு சீக்கிரம் செல்லலாம்”இருப்பு அய்யனார் கோவிலுக்கு போறதுக்கு ரெண்டு வழி இருக்குது. ஒரு வழி சாலையில போகணும். அதேமாதிரி இன்னொரு வழி இருக்குது. அது முந்திரிக்காடு வழியா போகணும். சாலையில போறதவிட முந்திரிக்காடு வழியா போனா கோவிலுக்கு சீக்கிரமா போயிரலாம். ஆனா, இளம்பெண் சாலை வழியாதான் போயிட்டு இருந்துருக்காங்க. அப்போ, அவ்வழியா அதே கிராமத்தை சேர்ந்த 25 வயசான மணிகண்டனும் போயிக்காரு. அப்போ, சாலை வழியா நடந்துபோனா எப்ப கோவிலுக்கு போறது? முந்திரிக்காடு வழியா போகலாமா? சீக்கிரமே போய்ரலாம்னு சொல்லிருக்காரு. ஊர்க்காரருதானே அப்டினு நம்புன இளம்பெண்ணும் மணிகண்டன் மேல எந்த சந்தேமும் படாம கூட போய்ருக்காங்க. ஆனா, அந்த நம்பிக்கையை பொய்யாக்கி சொந்த ஊர்க்காரரே நயவஞ்சக வேலை பாப்பாரு அப்டினு இளம்பெண்ணே நினைச்சிருக்கமாட்டாங்க. மணிகண்டனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவுமுந்தரிக்காட்டுக்குள்ள ஆள்நடமாட்டமே இல்லாததால இளம்பெண்ணை மணிகண்டன் பாலியல் வன்கொடுமை பண்ணிருக்காரு. அப்போ, தன்னால முடிஞ்சவரைக்கும் இளைஞரை தள்ளிவிட்டு போராடி பாத்துருக்காங்க இளம்பெண். ஆனா, மனிதமிருகமா மாறுன மணிகண்டன் இளம்பெண்ணோட துப்பட்டாவை எடுத்து கழுத்த நெரிச்சி கொலை பண்ணிட்டு அங்க இருந்து தப்பி ஓடிட்டாரு. அதுக்குப்பிறகு மணிகண்டனை போலீசார் கைது பண்ணிட்டாங்க. இந்த வழக்கு கடந்த நாலு வருஷமா சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துல உள்ள மகிளா விரைவு நீதிமன்றத்துல நடந்துட்டு இருந்துச்சு. இப்ப, வழக்கு விசாரணையில மணிகண்டனோட குற்றம் நிரூபிக்கப்பட்டதால அவருக்கு ஆயுள் தண்டனை விதிச்சி நீதிமன்றம் உத்தரவிட்ருக்குது. Related Link மருமகனுடன் மனைவி உல்லாசம்