ஈரோட்டில் பிரசவ தேதி முடிந்தும் மருத்துவமனைக்கு வராத பழங்குடியின கர்ப்பிணியை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் குழுவினர் மலைப்பகுதிக்கே நேரில் சென்று மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலை கிராமத்தில் வசிக்கும் ஜோதி என்பவர் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அவருக்கு பர்கூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் பிரசவ தேதியாக மார்ச் 3 ஆம் தேதியை குறித்து கொடுத்து அனுப்பினர். ஆனால் அந்த தேதி முடிந்தும் அப்பெண் மருத்துவமனைக்கு வராததால், காவல்துறையினருடன் மலைக்கு பகுதிக்கு சென்ற மருத்துவ குழுவினர் ஜோதியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.