நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே ஆடர்லியில் யானை தாக்கியதில் பழங்குடியின இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். பழங்குடியின இளைஞர் விஜயகுமார் என்பவர் கடைசி பேருந்தில் வந்து ஆடர்லி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி இரவு 8 மணியளவில் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்பகுதியில் காட்டுயானைகளின் நடமாட்டம் இருக்கும் நிலையில் இளைஞர் விஜய்குமாரை யானை தாக்கியது. இரவு முழுவதும் விஜயகுமார் வீட்டிற்கு வராத நிலையில் அவரது குடும்பத்தினர் காலையில் தேடியபோது தேயிலை தோட்டம் அருகே உயிரிழந்து கிடந்தது தெரிய வந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.