கள்ளக்குறிச்சியில் வீடு வாடகைக்கு எடுத்து கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து கருக்கலைப்பில் ஈடுபட்ட நபரை போலீஸார் கைது செய்தனர். தருமபுரி சுகாதாரத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கள்ளக்குறிச்சி வஉசி நகரில் ரஞ்சித்குமார், சந்திரன் ஆகியோர் குழந்தையின் பாலினத்தை சட்டவிரோதமாக கண்டறிந்தும், கருக்கலைப்பிலும் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.