சென்னை சோழிங்கநல்லூரில் காரில் கடத்தி வரப்பட்ட சுமார் 110 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்தனர். ரகசிய தகவலின் பேரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினர் இன்னோவா கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்த போது கஞ்சா கடத்தியது கண்டு பிடிக்கப்பட்டது.