திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் கழிவு நீர் தொட்டி அமைப்பதற்காக பள்ளம் தோண்டியபோது மண் சரிந்து அருகில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளியை தீயணைப்பு வீரர்கள் பத்திராக மீட்டனர். பைசூர் ரஹ்மான் என்பவருக்கு சொந்தமான வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டுவதற்காக சுப்பிரமணி என்பவர் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.