உலகக் கோப்பையை வென்ற பிறகு, நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்ததாக இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தெரிவித்தார். சென்னை ஓஎம்ஆர் சாலை செம்மஞ்சேரி சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் கலந்துகொண்ட அவர், எம்.ஜெ. உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்தார்.