மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள அழகர்கோவிலில் நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சௌந்தர்யா, கணவர் விசாகனுடன் சுவாமி தரிசனம் செய்தார். முன்னதாக, கள்ளழகர் கோவிலுக்கு வருகை தந்த சௌந்தர்யா மற்றும் விசாகனுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து, கள்ளழகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தனர். பிறகு, பதினெட்டாம்படி கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு சென்று கோவில் கதவுகளுக்கு சந்தனம் கொடுத்து சிறப்பு அபிஷேகம் நடத்தி சுவாமி தரிசனம் செய்தனர். இதனையடுத்து அந்த தம்பதிக்கு கோவில் கண்காணிப்பாளர் பிரதீபா பிரசாதம் வழங்கினார்.