பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோவிலுக்கு கூடுதலாக துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு தினத்தன்று அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடந்து விடாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பழநி அடிவாரம் மற்றும் மலைக்கோவிலில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.