தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆதி கும்பேஸ்வரசுவாமி கோயிலில் கும்பமுனி சித்தர் குருபூஜை விழா சிறப்பாக நடைபெற்றது. காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஆதிவிநாயகருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.