திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த 10 -தினங்களுக்கு மேலாக பல்வேறு வகையான கால நிலைகள் நிலவி வந்தது, குறிப்பாக அதிகாலை வேளையில் வெயிலின் தாக்கமும் பிற்பகலில் பனிமூட்டம் மற்றும் பனி சாரலும் ஏற்பட்டு வந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் கொடைக்கானலில் உறைப்பனி ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் வேலையில் வெயிலின் சற்று அதிகரித்தே காணப்பட்டது. இதனால் மாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிரும் நிலவி வந்தது. அதனை தொடர்ந்து இன்று காலை கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் நீர் ஆவியாகி மேலே பறந்து சென்ற போது கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இருந்தது, மேலும் ஜிம்காண மைதானம், கீழ்பூமி, பாம்பார்புரம், அப்சர்வேட்டரி ஆகிய பகுதிகளில் ஆங்காங்கே உறைப்பனி காணப்படுகிறது. இந்த உறைப்பனி புல்வெளிகள் மீது வெள்ளைக்கம்பம் விரித்தது போல் காட்சியளித்து,அதே போல இங்குள்ள மரம் செடி கொடிகளின் மீதும், வாகனங்கள் மீதும் உறைபனி படர்ந்து ரம்யமாக காட்சியளித்தது. வெகு நாட்களுக்குப் பிறகு காணப்பட்ட உறைபனியை அப்பகுதியில் காண வந்த சுற்றுலா பயணிகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். மேலும் உறைப்பனியின் காரணமாக கடும் குளிர் நிலவி வருவதால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கை சற்று பாதிக்கப்பட்டுள்ளது.இதையும் படியுங்கள் : பேருந்து நிலையத்தில் பெண் பயணியிடம் திருட்டு