அனைத்து காவல் அதிகாரிகளும் கட்டாயம் தலை கவசம் அணியவேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையாளர் அருண் உத்தரவிட்டுள்ளார். காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அனைவரும் சீருடை மற்றும் இதர உடையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் போது கண்டிப்பாக தலைக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் காவல்துறையினர் மீதும், துறை ரீதியான நடவடிக்கை மற்றும் மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.