சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அனைத்து திட்டங்களும் திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டதுதான் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். ரங்கபாஷ்யம் தெருவில் நடைபெற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் திமுக சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் பேசிய அவர், முதியோருக்கான பிரத்யேக மருத்துவமனை சைதாப்பேட்டையில் அமைந்துள்ளதாக கூறினார்.