திருப்பரங்குன்றம் மலை கோவில் வழிபாட்டு விவகாரத்தில் முருகனும் காப்பாற்றப்படுவார், அல்லாவும் காப்பாற்றப்படுவார் என அமைச்சர் சேகர்பாபு கூறினார். சென்னை மாநகராட்சி 7-வது மண்டலத்துக்கு உட்பட்ட 86-வது வார்டு பகுதியில் மக்களின் குறைகளை கேட்டறிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், மதம், இனம், மொழியால் மக்களை பிளவுபடுத்த முளைக்கும் சக்திகளை முதல்வர் ஒடுக்குவார் என்றார்.