கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் வட்டிக்கு பணம் வாங்கியவரின் முழு சொத்தையும் கந்துவட்டி கும்பல் அபகரித்துக் கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சூளகிரியை சேர்ந்த கோபி பேன்சி மற்றும் செருப்பு கடை வைத்திருந்த நிலையில் கடை விரிவாகத்திற்காக ஜவுளி கடை நடத்தி வரும் மஞ்சுளா என்பவரிடம் கடையை அடமானம் வைத்து 10 லட்சம் ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடந்த 10 மாதங்கள் வட்டி செலுத்தாத நிலையில், மஞ்சுளா செல்வகுமார் என்பவருக்கு கோபிக்கு சொந்தமான காலி நிலத்தை 86 லட்சம் ரூபாய்க்கு விலை பேசி பத்திரப்பதிவு செய்து கொடுத்ததோடு கடையும் பறித்து கொண்டதாக கூறப்படுகிறது.