ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்த செங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் கல்குவாரி அருகே ஏரி பகுதிக்கு சொந்தமான குரங்கு குட்டை என்ற இடத்தில் தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் சார்பில் 100 நாள் பணி கடந்த 2021-22 ஆம் ஆண்டு 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் மூலமாக பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த மர்ம கும்பல் ஏராளமானோர் ஒன்று திரண்டு இரவும் பகலும் பாராமல் முரம்பு மண் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக குரங்கு குட்டை என்ற நிலப்பகுதியில் முரம்பு மண் பல மாதங்களாக கடத்தலில் ஈடுபட்டதால் சுமார் 2 ஆட்கள் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் அதேபோல் இந்த மண் கடத்தல் நடைபெற்றால் செங்காடு பகுதி என்பது சுடுகாடாக மாற வாய்ப்புள்ளதாக கிராம பொதுமக்கள் தங்களுடைய வேதனைகளை தெரிவிக்கின்றனர். . மேலும் பலமுறை அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் அதிகாரிகள் எந்த ஒரு செவி சாய்க்காததால் ஆவேசமடைந்த அப்பகுதி கிராம இளைஞர்கள் ஏராளமானோர் ஒன்று திரண்டு குரங்கு குட்டை என்ற இடத்தில் மண் கடத்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த கும்பல் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை மடக்கி பிடிக்க முற்பட்டபோது தகவலை அறிந்த கடத்தல் கும்பல்கள் உடனடியாக அங்கிருந்து வாகனங்களை எடுத்து கொண்டு சென்று விட்டதாக கூறப்படுகிறது.எனவே இதுபோன்று பல மாதங்களாக அப்பகுதியில் முரம்பு மண் கடத்தலில் ஈடுபடும் கும்பல் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து செங்காடு பகுதியை பாதுகாக்க வேண்டுமென அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்..இதையும் படியுங்கள் : மீனவர்கள் போராட்டத்தில் பங்கேற்ற அஜிதா பரபரப்பு பேட்டி