விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்க விட மாட்டோம் என்பதில் முதலமைச்சர் உறுதியாக இருப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சேத்துப்பட்டில் உள்ள எம்சிசி பள்ளியில் நடைபெற்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், பள்ளி சென்று படித்தாலே தீட்டு என்று கூறிய காலத்தில் கல்வியை வளர்க்க பள்ளிக்கூடங்களை அமைத்து கிறிஸ்தவ அமைப்புகள் உதவியதாக தெரிவித்தார்.