மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக வடிவமைக்கப்பட்ட வெள்ளித் தேரின் வெள்ளோட்டம் தொடக்க விழா கோலாகலமாக நடைபெற்றது. முன்னதாக வெள்ளி தேரின் கோபுர கலசம் புனித நீரால் நன்னீராட்டப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.