திண்டுக்கல் மாவட்டம் சந்தையூர் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் ஆட்டுக்குட்டியை விழுங்க முயன்ற 18 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது. மலைப்பாம்பை கண்டு அச்சமடைந்தவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்த நிலையில், அங்கு வந்த அவர்கள் பாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்டனர்.