திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே சாதி மறுப்பு திருமணம் செய்த ஒரே காரணத்தால், நண்பரின் இறப்பிற்கு மரியாதை செலுத்த சென்றவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பெரிய ஓபுளாபுரம் மீனவர் கிராமத்தை சேர்ந்த வான்மதியும் அதே கிராமத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த பிரேம்குமாரும் நான்காண்டுகளுக்கு முன் சாதி மறுப்பு திருமணம் செய்தனர். இதனால் இரு குடும்பத்தினரும் கிராமத்தில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில், பிரேம்குமாரின் நண்பர் ரஞ்சித் என்பவர் உயிரிழந்தார். அவருக்கு மரியாதை செலுத்த சென்ற பிரேம் குமார் உள்ளிட்ட 4 பேர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.இதையும் படியுங்கள் : மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கொடியேற்றம்