திருப்பத்தூர் மாவட்டம் குனிச்சூர் பகுதியில் மொபட்டில் சென்ற முதியவர், கார் மோதி உயிரிழந்தார். இந்நிலையில் கார் ஓட்டுநரை கைது செய்ய கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள் போலீஸாரிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். கூட்டு சாலையில் மொபட்டில் சென்ற சிவா என்பவர், வளைவில் திரும்ப முயன்ற போது, பின்னால் சென்ற கர்நாடகா பதிவெண் கொண்ட கார் மோதியது.