கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மின் கம்பத்தில் இருந்து விழுந்து மின் ஊழியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எட்டாமடை பகுதியை சேர்ந்த அஸ்வின் குமார் பார்வதிபுரம் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் கேங் மேனாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் குமரி பழைய காலனியில் உள்ள கட்டடத்திற்கு மின்தடை ஏற்பட்டுள்ளதாக புகார் வந்த நிலையில் அங்கு சென்ற அஸ்வின் குமார் மின்கம்பத்தில் ஏறி பணி செய்த போது தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார்.