திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் போலீஸ் பூத்தில் இருந்த டேபிள், சேரை தூக்கி வீசி பெண் அடாவடி செய்த வீடியோ வைரலாகி வருகிறது. 45 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், பேருந்து நிலையத்தில் படுத்திருந்த நாயை கட்டையால் கொடூரமாக தாக்கியும், டீக்கடையில் ரகளை செய்தும் அராஜகத்தில் ஈடுபட்ட நிலையில், மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.