திருவண்ணாமலையில் மேலத்திக்கான் பகுதியில் கட்டடத்தின் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து காணப்படும் நிலையில் குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜன்மன் திட்டத்தின் கீழ், வேப்பூர் செக்கடி, கீழ் அணைக்கரை, மேல்முத்தனூர் உள்ளிட்ட 11 இடங்களில் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது. அதில் மேலத்திக்கான் பகுதியில் மாவட்ட ஆட்சியரால் ரிப்பன் வெட்டி திறக்கப்பட்ட அங்கன்வாடி மையக் கட்டடம், ஆபத்தான நிலையில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து காணப்பட்டதால், தரமான கட்டடத்தில் அங்கன்வாடி மையத்தை திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.