குமரி மாவட்டம் அழகிய மண்டபத்தில், கொடுத்த 500 ரூபாய் பணத்தை திருப்பி கேட்ட ஆத்திரத்தில் கூலி தொழிலாளியை ஆட்டோ ஓட்டுநர்கள் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கூலி தொழிலாளியான ஜெகன் செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டி வரும் பிலாங்காலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் என்பவருக்கு கடனாக கொடுத்த 500 ரூபாயை திருப்பிக்கேட்டதால் ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் மற்றொரு ஆட்டோ ஓட்டுநர் சைஜு உடன் இணைந்து, தாக்கியதாக தெரிகிறது