நிவாரணம் வழங்கும் நேரத்தில் அண்ணாமலை அரசியல் செய்யக் கூடாது என அமைச்சர் பொன்முடி கூறினார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், திமுக அரசு மீது பொதுமக்கள் கோபத்தில் இருப்பதாகவும், அதன் காரணமாகவே பொன்முடி மீது சேறு அடித்ததாகவும் அண்ணாமலை எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளாரே என எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு தெரிவித்தார்.